Friday 8 January 2016

ஏ.டி.எம் கொள்ளையர்கள்

தாய் பிரசவ வேதனையில் துடித்து கொண்டிருக்க, (பிறக்கப்போகும்!) குழந்தை அந்த வீட்டில் நெட் கனெக்சன் இருந்தால்தான் போகும் என்று அடம் பிடிக்கும். இது ஒரு விளம்பரத்தில் வரும் காட்சி.

பிறந்த குழந்தை அன்டிராயர் போடுதோ இல்லையோ "ஆன்டிராய்ட்"டும் கையுமாய் அலையும் இந்த காலத்திலும் "ஏ.டி.எம்"மில் பணம் எடுக்கத் தெரியாத அப்பாவிகளும் இருக்கிறார்கள்.

ஒரு முறை பணம் எடுக்க செல்லும் பொழுது வழக்கம் போல் வரிசையில் வராது நம் ம(மா)க்கள் சிலர் கல்யாண வீட்டிற்கு வந்தது போல் நேராக பணம் எடுக்க சென்றனர்.

"ரூல்ஸ் ராமானுஜர்கள்" வரிசையில் நானும் நீண்ட நேரம்  காத்திருந்தேன்.

எனக்கு முன் மூன்று நபர்கள் இருந்தனர், அதில் ஒரு ராமனுஜம் சாருக்கு "இயந்திர கேசியரிடம்" இருந்து பணம் கறக்கும் கலை தெரியவில்லை.

அவரின் "ராஜ முழியை" வைத்தே எடை போட்டு விட்ட ஒரு ஆத்மா வேகமாக கார்டை கொடுங்க சார் நான் எடுத்து கொடுக்கிறேன் என்றார்.

ஆஹா இப்படிபட்ட புண்ணியவான்கள் இருப்பதால்தான் வருனபகாவனும் அவ்வப்பொழுது "ஆனந்தக்கண்ணீர்" வடிக்கிறார் போல என நினைத்துக்கொண்டேன்.

நம்ம ராமானுஜம் சாரும் பவ்வியமாக, உதவ வந்த புன்னியவானிடம் கார்டு, பின் நம்பர், எடுக்க வேண்டிய தொகை போன்ற விவரங்களை கொடுத்தார்.

                                                     படம்:நன்றி இணையம்

நம்ம கேசியரும் பொறுப்பாக பணத்தை தன் வயிற்றின் மூலம் வெளியே  தள்ளினார்.

நம்ம ராமானுஜம் சாரும் நன்றி பெருக்கெடுக்க பணத்தை வாங்க கையை நீட்ட இப்பொழுதுதான் ட்விஸ்ட்!
திருவாளர் புண்ணியவான் அவர்கள் கவுண்டமணி ஸ்டைலில் "டேக் ட்வென்டி ருப்பீஸ்" என்றார்.

அதாகப்பட்டது "புண்ணியவான்" அவர்கள் பணம் எடுத்து கொடுத்ததற்கு கமிஷன் இருபது ரூபாய்!

இது எப்படி இருக்கு (நோகாமல் நுங்கு சாப்பிடுவது என்பது இதுதானோ)

7 comments:

  1. இதெல்லாம் ஏட்டியெமுள்ள சகஜமப்பா.....
    ரசித்தேன் நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. முதன் முறை சம்பவத்தை பார்த்ததால் "நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்" போல.
      கருத்துக்கு நன்றி ஜி.

      Delete
  2. ஹா... ஹா... அதுசரி...
    இப்படியெல்லாம் இருக்கா...
    அவ்வ்வ்வ்வ்வ்...

    ReplyDelete
    Replies
    1. நடக்கிறது நண்பரே.

      Delete
  3. இதுக்குமா இருபது ரூபாய் ,இப்படி எத்தனை பேர் கிளம்பி இருக்காங்க :)

    ReplyDelete
  4. ஒரு கும்பலே இருக்கிறது நண்பரே, வருகைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. படிச்சவன் சூது பண்ணா போவான் போவான்னு பாரதி ஆசீர்வதித்தது இப்படிப்பட்ட ஆட்களைத்தான் :)

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...