Sunday, 29 November 2015

சோதனைப்பதிவு

தமிழ்மணத்தில் இணைகிறதா என்பதற்கான சோதனை.


இணைக்க முடியவில்லை.

உதவி:
நண்பர்களே, இந்த வலைப்பூவின் பதிவுகளை தமிழ்மணத்தில் இணைப்பது எப்படி என்பதை கூறுங்களேன்.

நன்றி.

Wednesday, 25 November 2015

ஆத்தா நான் பாஸ் ஆயிட்டேன்

தம்பி சீக்கிரம் எந்திரிடா, மணி 4தான ஆகுது இன்னும் கொஞ்ச நேரம் தூங்க விடும்மா ப்ளீஸ்.

"செக் இன்" பண்ணனும்டா லேட் ஆனா  "கியு" அனுமார் வால் போல  நீளமா இருக்கும்டா தம்பி, இப்பவே கிளம்புனா முதல் ஆளா செக்  இன் முடிச்சுரலாம் அப்புறம் ரெஸ்ட் ரூம்ல போய் தூங்கு.

வேண்டா வெறுப்பா எழுந்து, குளித்து, கிளம்பி வரிசையில் போய் நிற்கும்போது நான் 50வது ஆள்.

செக்யூரிட்டி செக்கில் மாட்டி கொண்டவர்கள் "பனிஷ்மெண்ட் ஏரியா"விற்கு அனுப்ப பட்டனர். ஆக சிறந்த "அறுவை மாஸ்டர்கள்" கொடுக்கும் ட்ரீட்ல்   அவர்கள் தெளிந்து விடுவார்கள்    
போரிங்கா இருந்துச்சு, வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன் செக்யூரிட்டி வார்ன் செய்து கொண்டுஇருந்தார் யாராவது "கொண்டு" வந்து இருந்தா தயவு செய்து வெளியே போயிருங்க.
எனக்கு முன் "ஊதி" இருந்தவனை மீண்டும் ஊத சொன்னார்கள். எனது முறையும் வந்தது, நான் "செக் இன்னில்" பாசாகி எல்.கே.ஜி-B  செக்சன் வெய்டிங் ரூமில் வந்து அக்கடா என உட்கார்ந்து ஹோம் வொர்க் நோட்டில் தேதி எழுத "ஸ்மார்ட் சுவரை" பார்த்து கேட்டேன், நாள் பிப்ரவரி 30(?), 2060 என்றது.

பிற்சேர்க்கை:
பள்ளி மாணவர்கள் குடிக்கும் செய்திகளை படிக்கும்பொழுது வரும் காலத்தில் இப்படியம் நடக்கலாம்.டிஸ்கி:
நகைச்சுவை நோக்கத்தில் எழுத பட்டது. யாரையும் புண் படுத்த அல்ல, நன்றி.


Sunday, 22 November 2015

பொட்டி வந்தாச்சு

கரகத்தை பாக்க வந்த மகாஜனங்களே, நீங்க எதிர்பாத்து வந்தது நம்ம ஆட்டத்துல இருக்குமுங்க (நான் நகைச்சுவையை சொன்னேன்) பாத்து போட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க.
----------------------------------------------------------------------------------------------------------------------

இந்த சம்பவம் நடந்து இருபது வருஷம் இருக்கும். அப்போ எல்லாம் வீட்டுல கலர் டிவி இருந்தாலே அந்த வீட்டை "அம்பானி"  மாளிகை ரேஞ்சுக்கு பாக்குற காலம்.

கல்யாணம் காட்சி நடந்தால் அம்பானி வீடுகள்ல "வீடியோ டெக்" வைத்து விடியுற வரைக்கும் சினிமா ஓட்டுவாங்க இது இலவசமுங்க, அந்த தெருவுல உள்ள மக்கள் எல்லாம் ஆஜர்.

இப்ப நெட்ல படம் "ரிலீஸ்!" ஆகுற மாதிரி எல்லாம் அப்போ இல்ல. நமக்கு பிடிச்ச பாட்ட எப்படி காட்சி "படுத்தி" இருப்பாங்க என்பதே ஒளியும் ஒலியும்லதான் பக்க முடியும்.
ஒரு நாள் பக்கத்துக்கு தெருவில் உள்ள வீட்ல திருமணம், வழக்கம் போல "டெக்"ல படம் போட ஏற்பாடுகள் நடந்துகிட்டு இருந்திச்சு, ஒரே ராத்திரியில் இரண்டு (சில நேரம் மூணு) படங்கள் போடுவாங்க. என்ன படங்கள் இருக்குன்னு தெரிஞ்சுக்க சில "உளவாளிகள்" உளவு பாத்து சொல்வாங்க.

பக்கத்துக்கு வீடு பாப்பா அப்படி ஒரு உளவாளி மூலம் தகவல் தெரிஞ்சுகிட்டு தெருவெல்லாம் கேக்குற மாதிரி ஹேய்...இன்னைக்கி "கருவாட்டுக்காரன்" போடுறாங்க டோய்...ன்னு சத்தமா சொல்லுச்சு.

எங்களுக்கு ஒன்னும் புரியல, பாப்பாகிட்ட கேட்டா கருவாட்டுக்காரன் கொண்டு வந்து இருக்காங்கன்னு அதே பல்லவி பாடுது.   
Related Posts Plugin for WordPress, Blogger...