Wednesday, 27 January 2016

சொர்ணாக்கா vs சொர்ணாக்கா

மந்திரியுடன் மார்க்கெட் சென்று இருந்தேன். மந்திரி வெண்டைகாயை ஒடித்து பார்த்துகொண்டிருக்க நான் வழக்கம் போல் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன்.

பக்கத்துக்கு கடையில் ஒரே சலசலப்பு, நம் கலாச்சாரதை பேணிக்காக்கும் பொறுப்புடன் எனது முழு கவனமும் இபோது அங்கே சென்றது.

அது வெங்காய வியாபாரம் நடக்கும் கடை, கடைக்கார பெண்மணிக்கும் கஸ்டமருக்கும் தகராறு.

ஒழுங்கா எடை போடுடி என கஸ்டமர் வாக்குவாதம் பண்ண,


நல்லாப்பாரு, நாலு வெங்காயம் கூடத்தான் இருக்கு இதெல்லாம் விவசாயிக்கு போற காசு, பேசாம வாங்கிட்டு போ என கடைக்கார  அம்மணி கூற,

அப்புறம் என்ன மயி***கு முள்ள பிடிக்குற, ஒழுங்கா எடை போடுடி என கத்திகொண்டே கஸ்டமர் இன்னும் நாலு வெங்காயத்தை எடுத்து தராசில் போட்டார்.

கடைக்கார அம்மணிக்கு வந்தது கோபம், நீ வெங்காயமும் வாங்க வேண்டாம் ஒரு ம**ம் வாங்க வேண்டாம், போடி என கஸ்டமரை துரத்த ஆரம்பித்தார். (டிஜிட்டல் தராசுக்கு மாறுங்க)

உடனே கஸ்டமரின் சுருதியில் நாலு கட்டை கீழே இறங்கி
விட்டது, ஏ போடுடி ஒனக்கு ஒன்னும் கொரஞ்சுடாது என்று செல்ல வாதத்தில் இறங்கி மீண்டும் நாலு கட்டை ஏறி ஒரு வழியாக
பெரிய வாக்கு வாததிற்குப்பின் பண்டப்பரிமாற்றம் நடந்தது.

பாவம் அந்த கடைக்கார பெண்மணி ஒரு கஸ்டமரை இழந்துவிட்டதே, என "கண்கள் பனிக்க" வீட்டுக்கு கிளம்பினேன்.

மீண்டும் அடுத்த வாரம் மார்கெட் சென்று வழமை போல் வேடிக்கை பார்க்கும் வேலையினை தொடர...

என்ன ஒரு ஆச்சரியம் கடந்த வாரம் ரணகளமாய் இருந்த,

அதே கடை...

அதே கஸ்டமர், ஆனால்...

 காட்சி மாற்றம்...

இந்தா கூட இரண்டு வெங்காயம் போட்டுக்க என கடைக்கார அம்மணி கூற, போதும், போதும் என கஸ்டமர் கூற "இதயம் இனிக்க" வீடு திரும்பினேன்.

அதற்கடுத்த வாரம்...
நானும் மந்திரியும் காய்கறிகள் வாங்கிவிட்டு மார்கெட்டை விட்டு கிளம்பும் நேரத்தில், ஏ...தம்பி இங்கே வாப்பா என எனக்கு முரட்டுத்தனமான அழைப்பு. (ஆப்பு?)

அழைத்தது, வெங்காய கடை அக்கா (அக்காவுடன் ஸேம் கஸ்டமர்).

உள்ளூர ஒரு சின்ன உதறலுடன் என்னக்கா என கேட்டேன்.

80ம் 45ச்சும் எவ்வளவுப்பா?

125க்கா.

125ம் 15ம் எவ்வளவு?

140க்கா.

பாக்க படிச்சவன் மாதிரி இருக்க (மாதிரிதானா?) சரியா கணக்குப்போடு 145 வரும். 

இல்லக்கா 140தான்.

அட என்னப்பா நீ...அவசரப்படாம "நல்லா யோசிச்சு" சொல்லு என அக்கா எகிற...

அல்ஜிப்ரா தெரியாமல் கணக்கு வாத்தியார் முன் வியர்க்கும் மாணவன் நிலைக்கு, நான் வந்து விட்ட தருணத்தில்...

என்னங்க என மந்திரியார் என்னை அழைக்க...

கணக்கு வாத்தியார் முன் முழி பிதுங்க நிற்கும்போது அந்த கிளாஸ்
அவர் முடிந்து விட்டால், எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இருக்குமோ அந்த ஆனந்தம் "என்னங்க என மந்திரியார் என்னை அழைத்தவுடன் கிட்டியது"

இதோ வரேன் என்றவாறே (சொர்ணா)அக்காவிடம் இருந்து நழுவினேன்.

இனி, மார்கெட் சென்றால், சென்ற வேலையினை மட்டும் பார்ப்பது என மனதில் உறுதி எடுத்துக்கொண்டேன்.


9 comments:

 1. உங்க கிட்டே கேள்வியை சொர்ணாக்கா ,மந்திரிகிட்டே ஏன் கேட்கலைன்னு யோசித்துப் பாருங்க ,ஜி :)

  ReplyDelete
  Replies
  1. பலி கடா கழுத்துல கத்தியை வைக்குறதுதானே தானே நடைமுறை ஜி.

   Delete
 2. தப்பித்து விட்டீர்கள்...

  ReplyDelete
  Replies
  1. தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என ஓடோடி வந்தேன் :), நன்றி நண்பரே.

   Delete

 3. அந்த அஞ்சு ரூபாய்க்கு 2 வெங்காயம் தானா

  ReplyDelete
  Replies
  1. காசுதான் பிரச்சனை என்றால் அந்த கஸ்டமர் பெண்மணி வேறு கடைக்கு சென்று இருப்பார். அவர்களுக்குள் காசுக்காக சண்டை நடப்பதாக தெரியவில்லை, அதையும் மீறி ஒருவிதமான முரட்டுத்தனமான நட்பு அவர்களுக்கிடையே இருப்பதாக தோன்றுகிறது.

   Delete

 4. அந்த அஞ்சு ரூபாய்க்கு 2 வெங்காயம் தானா

  ReplyDelete
 5. ஹாஹாஹா ரசித்தேன் உரையாடலை நண்பரே...

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...