Wednesday 25 November 2015

ஆத்தா நான் பாஸ் ஆயிட்டேன்

தம்பி சீக்கிரம் எந்திரிடா, மணி 4தான ஆகுது இன்னும் கொஞ்ச நேரம் தூங்க விடும்மா ப்ளீஸ்.

"செக் இன்" பண்ணனும்டா லேட் ஆனா  "கியு" அனுமார் வால் போல  நீளமா இருக்கும்டா தம்பி, இப்பவே கிளம்புனா முதல் ஆளா செக்  இன் முடிச்சுரலாம் அப்புறம் ரெஸ்ட் ரூம்ல போய் தூங்கு.

வேண்டா வெறுப்பா எழுந்து, குளித்து, கிளம்பி வரிசையில் போய் நிற்கும்போது நான் 50வது ஆள்.

செக்யூரிட்டி செக்கில் மாட்டி கொண்டவர்கள் "பனிஷ்மெண்ட் ஏரியா"விற்கு அனுப்ப பட்டனர். ஆக சிறந்த "அறுவை மாஸ்டர்கள்" கொடுக்கும் ட்ரீட்ல்   அவர்கள் தெளிந்து விடுவார்கள்    
போரிங்கா இருந்துச்சு, வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன் செக்யூரிட்டி வார்ன் செய்து கொண்டுஇருந்தார் யாராவது "கொண்டு" வந்து இருந்தா தயவு செய்து வெளியே போயிருங்க.




எனக்கு முன் "ஊதி" இருந்தவனை மீண்டும் ஊத சொன்னார்கள். எனது முறையும் வந்தது, நான் "செக் இன்னில்" பாசாகி எல்.கே.ஜி-B  செக்சன் வெய்டிங் ரூமில் வந்து அக்கடா என உட்கார்ந்து ஹோம் வொர்க் நோட்டில் தேதி எழுத "ஸ்மார்ட் சுவரை" பார்த்து கேட்டேன், நாள் பிப்ரவரி 30(?), 2060 என்றது.

பிற்சேர்க்கை:
பள்ளி மாணவர்கள் குடிக்கும் செய்திகளை படிக்கும்பொழுது வரும் காலத்தில் இப்படியம் நடக்கலாம்.



டிஸ்கி:
நகைச்சுவை நோக்கத்தில் எழுத பட்டது. யாரையும் புண் படுத்த அல்ல, நன்றி.


1 comment:

  1. வணக்கம் நண்பரே இந்த தேதியில எனக்கு ஒரு பங்க்ஷன் இருக்கு கண்டிப்பாக கலந்து கொள்ளனும். நல்லவேளை ஞாபகப்படுத்துனீங்க.... நன்றி

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...