Sunday 24 January 2016

வனத்திருப்பதி

தென் தமிழகத்தில் அமைந்துள்ளது வனத்திருப்பதி.
இங்கு குடி கொண்டுள்ள இறைவன் ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள்.

பொங்கல் விடுமுறையில் இங்கு சென்று வரும் வாய்ப்பு அமைந்தது.

காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை நடை திறந்து இருக்கும், நாங்கள் சென்றது சனிக்கிழமை. இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த இலவச இட வசதி உள்ளது.



துரித தரிசனம் வேண்டும் எனில் கட்டணம் 50 ரூபாய்.

தரிசனம் முடிந்தவுடன் தீர்த்தம், துளசி மற்றும் பிரசாதம் வழங்கப்படுகிறது.

இந்த நடைமுறை அனுதினமும் உள்ளதாம், புரட்டாசி சனிக்கிழமைகளில் வரும் பக்தர்கள் அனைவருக்கும் காலை முதல் (மதியம் வரை இருக்கலாம்) அன்னதானம் வழங்கப்படுகிறது
தரிசனம் முடித்தவுடன் இதற்கான டோக்கன் வழங்கப்படுகிறது.


எங்கு உள்ளது:
புன்னை நகர், திருச்செந்தூர் வட்டம்.

எப்படி செல்வது:
ட்ரெயினில் சென்றால் "கச்சனா விளை" நிலையத்தில் இறங்கி கொண்டால், கோவில் நடக்கும் தூரம்தான்.
செல்லும் வழியில் படம் "பிடித்த" காட்சி

 சாலை மார்க்கமாக சென்றால்  திருச்செந்தூரில் இருந்து குரும்பூர் வழியாக செல்லலாம் (நாசரேத் செல்லும் வழி), தூத்துக்குடி வழியாக சென்றாலும் குரும்பூர் வழியாக செல்லலாம்.

திருச்செந்தூரில் இருந்து 20km தொலைவு, தூத்துக்குடியில் இருந்து 45km தொலைவு.

எங்கு தங்குவது:
திருச்செந்தூர், தூத்துக்குடியில் தங்கலாம். (புன்னை நகரிலும் தங்கும் விடுதி உள்ளது)

விருப்பமுள்ளவர்கள் சென்று வாருங்கள்.

8 comments:

  1. Replies
    1. நன்றிக்கு நன்றி, நண்பரே.

      Delete
  2. தகவல் நன்று நண்பரே

    ReplyDelete
    Replies
    1. தொடர் ஊக்கத்திற்கு நன்றி ஜி.

      Delete
  3. ஒரிஜினல் திருப்பதி அளவுக்கு இங்கே வருமானம் இல்லை போலிருக்கே :)

    ReplyDelete
    Replies
    1. குமார் சார் கூறியது சரியே, நன்றி நண்பரே.

      Delete
  4. திருச்செந்தூர் போகும்போது சென்றோம்...
    கூட்டமில்லை.. 50 ரூபாய் எல்லாம் கேட்கவில்லை...
    நல்ல சுவாமி தரிசனம்...
    நம்ம சரவணபவன் அண்ணாச்சியின் சொந்த இடத்தில் அவர் பராமரிப்பில் இருக்கும் கோவில்...

    சிலைகள் எல்லாம் அவ்வளவு அழகு... பார்த்துக் கொண்டே இருக்கலாம்...

    சுவாமி அபிஷேகத்திற்காகவே பால் பசுக்களை வளர்க்கிறார்கள்.

    அவற்றை பராமரிப்பதைப் பார்த்து மெய்சிலிர்த்தோம்...

    சுத்தமாக இருக்கிறது கோவில்....

    பகவான்ஜி அவர்களே... இந்தக் கோவில் இருக்கும் இடத்தில் ஒரு கிராமமே தங்கலாம்....

    இது வருமானத்திற்காக கட்டியதுபோல் தெரியவில்லை... ஆத்ம திருப்திக்காக கட்டியதுபோல் இருக்கிறது....

    பகிர்வுக்கு நன்றி நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. விளக்கங்களுடன் கூறிய கருத்துக்கு நன்றி நண்பரே.

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...